| 
		  | 
		
		 
		 முகப்பு 
		
		 
		
		 பிரசாந்தி 
		நிகழ்வுகள் 
		
		 
		 சாயி 
		அவதாரம் 
		
		 
 போதனைகள் 
		
		 
		
		 இலங்கையில் 
		சாயி 
		
		 
		 அனுபவங்கள் 
		
		 
		
		 சாயி 
		நிலையங்கள் 
		
		 
		
		 சஞ்சிகைகள் 
		
		 
 வெளியீடுகள் 
		
		 
		
		 பொது 
		நிகழ்வுகள் 
		 
 பதிவிறக்கங்கள் 
		 
		
		 படங்கள் 
		 
		
		 உங்கள் 
		பக்கம் 
		 
		
		 தொடர்புகளுக்கு  
		 | 
		  | 
		
		
			- 
			சாயிபாபா
 
			- சாயி 
			சேவைத்திட்டங்கள்
 
     
			
			கல்விச்சேவை 
     மருத்துவ சேவை 
  
			- ஐவகை நோக்குகள்
 
     
			
			ஆன்மீக நோக்கு 
     கல்வி நோக்கு 
     சேவை நோக்கு 
     இளைஞர் நோக்கு 
     ஒருங்கிணைப்பு நோக்கு 
  
			- ஒன்பது அன்பு 
			ஒழுக்க நெறி
 
  
			- பத்து 
			அன்புக்கட்டளைகள்
 
  
		 
		 
		இன்று உலக நாடுகளில் உள்ள மக்கள் 
		அனைவரும் ஒன்று கூடும் இந்த உலகத்தின் ஆத்மீகத் தலைநகரமான புட்டபர்த்தி 
		என்ற புனித கிராமத்திற்கு செல்வோம். இற்றைக்கு 60 வருடங்களுக்கு முன்பு 
		மிகவும் சிறிய கிராமம். மாட்டு வண்டியே ஓட முடியாத நிலையில் இருந்தது. 
		மருத்துவமனை இல்லை> பாடசாலை இல்லை. . . . .  
		 
		இவற்றைவிட பொதுவாக உலகமெங்கும் அமைதி சீர்குலைந்து மனித இனம் இயல்பாகவுள்ள 
		தெய்வீகத் தன்மையை மறந்து இன, மத அடிப்படையில் வேற்றுமையை வளர்த்துக் 
		கொண்டிருந்த வேளையில் ஞானிகள், ரிஷிகள், நாட்டிலுள்ள நல்லவர்கள் எல்லோரும் 
		ஒன்று சோ;ந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர். நல்லவர்களைக் காப்பாற்ற 
		விரைந்து வா இறைவா. . . . . 
		 
		நல்லவர்களை மட்டுமல்ல தீயவர்களையும் காப்பாற்ற வேண்டுமென்று பரப்பிரம்மம் 
		சங்கற்பம் கொண்டது. பொருத்தமான இடமும், நேரமும் தீர்மானிக்கப்பட்டது. 
		மனிதனைக் காத்து வழிநடத்த மனித உருவம் கொண்டார் இறைவன் 
		
		இந்தியாவின் ஆந்திரப் 
		பிரதேசத்தில் உள்ள புட்டபர்த்தி என்னும் சிறிய கிராமத்தில் 1926 ஆம் ஆண்டு 
		கார்த்திகைத் திங்கள் 23 ஆம் நாள் சூரியன் உதயமாகும் நேரம் பகவான் சத்திய 
		சாயி பாபா திருஅவதாரம் செய்தார். தந்தை பெத்த வெங்கப்பராஜூ, தாயார் 
		ஈஸ்வரம்மா, பேரன் கொண்டமராஜூ, பிறந்த குழந்தையின் தலையைச் சுற்றி ஓர் 
		ஒளிவட்டம் காணப்பட்டது. இக்குழந்தையின் அழகும், புன்முறுவலும் காண்போர் 
		எல்லோரையும் கவர்ந்திழுத்தது. குழந்தையின் படுக்கை மேலும் கீழும் அசையத் 
		தொடங்கியது. அருகில் நின்றவர்கள் ஆச்சாpயத்துடன் படுக்கையை மெதுவாக 
		து}க்கிப் பார்த்தார்கள். படுக்கையின் கீழ் ஒரு பாம்பு - கருநாகம் 
		படுக்கையைத் தாங்கிய வண்ணமிருந்தது. சிறிது நேரத்தில் மெதுவாக அசைந்து 
		மறைந்து விட்டது. கிராமம் எங்கும் இச் செய்தி பரவத் தொடங்கியது.  
		 
		குழந்தைக்கு சத்திய நாராயண ராஜூ என்று பெயர் சூட்டப்பட்டது. எல்லோரும் 
		அன்புடன் சத்தியா என்று செல்லமாக அழைத்தார்கள். சத்தியா புட்டபர்;த்திக் 
		கிராமத்திலுள்ள அனைவருக்கும் செல்லக் குழந்தையாயிற்று. சீக்கிரமே 
		மல்லிகையின் அரும்பு மணம் பரவத் தொடங்கிற்று. ஒளி கக்கும் விளக்குப் போல் 
		அங்குமிங்கும் ஒளி வண்ணனாய் ஓடி ஆடி விளையாடினார். பள்ளிப்பருவம் துள்ளிய 
		ழைத்தது. பேரனார் கொண்டமராஜூ சத்தியாவிடம் மிகவும் அன்பு கொண்டவர். சத்யா 
		சாதாரண குழந்தையல்ல தெய்வக் குழந்தை என்று உணர்ந்து கொண்டவர்.  
		 
		சத்தியா கிராமத்திலுள்ள மற்றச் சிறுவர்களுக் கெல்லாம் இலட்சிய வீரனாக 
		விளங்கினான். அவர்கள் அவனை தங்கள் குரு என்று சொல்ல ஆரம்பித்தார்கள். 
		சத்தியா குழந்தைப் பருவத்திலே மாமிசம் உண்பதை முற்றாக வெறுத்தது மட்டுமல்ல 
		மாமிசம் சமைக்கும் வீடுகளுக்கும் செல்ல மறுத்தான். 
		 
		புட்டபர்த்தியில் சிறிய ஆரம்பப் பாடசாலை ஒன்றுக்கு தனது தோழா;களுடன் 
		செல்வது வழக்கம். பாடசாலையிலும் விசித்திர மாணவனாக விளங்கினான். தனது சக 
		மாணவர்களை அன்புடன் வழி நடத்தி அவர்களுக்கு பென்சில், அழிஇறப்பர், வீபூதி, 
		இனிப்பு வகைகள் போன்றவற்றை உருவாக்கிக் கொடுப்பான். சத்தியா ஒரு தெய்வீகப் 
		பிள்ளை என்பதை ஆசிரியர்களும் அறிந்து கொண்டார்கள். ஆனால் வீட்டில் உள்ள 
		அண்ணன் சேஷமராஜூவால் சத்தியாவின் தெய்வீகத்தை ஆரம்பத்தில் அறிந்து கொள்ள 
		முடியவில்லை.  
		 
		பிச்சை எடுப்பதற்கு வீட்டிற்கு வரும் எவரையும் வெறும் கையோடு அனுப்பியது 
		கிடையாது. சில வேளைகளில் பசியோடு வருபவர்களுக்கு தான் உண்ணும் உணவைக் 
		கொடுத்து விட்டு பசியோடு இருந்து விடுவார். சாப்பாட்டிற்கு வா என்று 
		அழைத்தால் தனது கையை மணந்து பார்க்கும்படி கூறுவார். கையிலே நெய் 
		வாசனையடிக்கும்.  
		 
		ஆரம்பக் கல்வியை நிறைவு செய்ததும் சத்தியா புக்கப்பட்டினம் கிராமத்திலே 
		உள்ள ஒரு பாடசாலைக்கு செல்லத் தொடங்கினார். அங்கும் மாணவர்களும், 
		ஆசிரியர்களும் சத்தியாவின் தெய்வீக ஆற்றலை அறிந்து கொண்டார்கள். இந்தப் 
		பாடசாலைக்கு பல மைல் து}ரம் நடந்தே செல்ல வேண்டும். செல்லும் பொழுது எல்லா 
		மாணவர்களையும் சோ;த்து பஜனை பாடும்படி உற்சாகப் படுத்துவார். தானே பஜனைப் 
		பாடல்களை எழுதி மெட்டமைத்து இனிய குரலில் சொல்லியும் கொடுப்பார்.  
		 
		எந்த நேரமும் சத்தியாவைச் சுற்றி ஒரு கூட்டம் காணப்படும். சிலவேளைகளில் 
		மாணவத் தோழா;கள் கேட்கும் உணவுப் பண்டங்களை தனது கையை அசைத்து எடுத்துக் 
		கொடுப்பார். கற்கண்ட, லட்டு, மாம்பழம், அப்பிள் போன்றனவற்றை அவர்கள் 
		விரும்பியபடி உடனே எடுத்துக் கொடுப்பார். சத்தியாவிற்கு கல்வி கற்பித்த 
		ஆசிரியர்களில் திரு.பி.சுப்பண்ணாச்சாரி, திரு.வி.சி. கொண்டப்பா என்போர் 
		பாபா தெய்வீக அவதாரம் என்று உணர்ந்தவர்கள். திரு.மஹபூப்கான் ஆசிரியர் சத்யா 
		மேல் அளவு கடந்த அன்புள்ளவர். 
		 
		ஆசிரியர் ஒருவர் ஒரு நாள் சத்யா தான் சொன்ன குறிப்புக்களை எழுதாமை கண்டு 
		கோபமடைந்தார். வாங்கின் மேல் ஏறி நிற்கும்படி உத்தரவிட்டார், அவருடைய பாடம் 
		முடிவடைந்து. மணி அடித்ததும் ஆசிரியர் நாற்காலியை விட்டு எழுந்திருக்க 
		முடியவில்லை. சத்யா வாங்கின் மீது நின்று கொண்டிருந்தார், அடுத்த 
		பாடத்திற்குரிய ஆசிரியர் மஹபூப்கான் வந்து தனது பாடத்தை தொடர 
		அனுமதிக்கும்படி கேட்டார். ஆசிரியரோ நாற்காலியிலிருந்து தன்னால் எழுந்து 
		கொள்ள முடியாமையைக் கூறினார். மஹபூப்கான் சத்தியா வாங்கின் மேல் நிற்பதைக் 
		கண்டு நிலைமையை விளக்கினார், சத்தியாவை கீழே இறக்குங்கள் நீங்கள் 
		எழுந்திருக்கலாம் என்று ஆசிரியரிடம் கூறினார். இருவருக்குமிடையே நடைபெற்ற 
		சம்பாசணையைக் கேட்ட மாணவர்களுக்கு சிரிப்பு வந்தது. ஆசிரியர் சத்தியாவை 
		இறங்கி ஆசனத்தில் அமரும்படி கூறினார். சத்தியா இறங்கியதும் ஆசிரியரும் 
		ஒட்டிய கதிரையிலிருந்து விடுபட்டு எழுந்து சென்றார். இவ்வாறு சத்யா தான் 
		யார்? என்பதை உலகறியவைக்க ஆரம்பித்தார்.  
		 
		ஒருமுறை ஆசிரியருடைய விலைமதிப்புள்ள பேனா ஒன்று காணாமல் போனது. எங்கு 
		தேடியும் கிடைக்கவில்லை. பாடசாலையின் அதிபர் சத்தியாவை அழைத்து பேனா காணாமல் 
		போன விடயத்தை கூறினார். பாடசாலையில் கடமையாற்றும் உதவியாளர் அந்தப் 
		பேனையைத் திருடி தன்னுடைய கிராமத்திற்கு அனுப்பி வைத்ததாக சத்தியா 
		குறிப்பிட்டார், உடனே உதவியாளரை அழைத்து கண்டிப்பாக பேனாவை நீ தான் எடுத்து 
		ஊருக்கு அனுப்பி விட்டாய் என்ற விடயத்தை சொன்னார்கள். அவரும் உண்மையை 
		மறைக்க முடியாமல் நடந்ததை ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோரினார். பாடசாலை 
		அதிபர் சத்தியாவின் தலையைச் சுற்றி தெய்வீக ஒளி வட்டத்தைக் கண்டு பாதங்களில் 
		வீழ்ந்து வணங்கினார்> பரவசமானார். இந்த விடயம் புட்டபர்த்திக் கிராமம் 
		முழுதும் பரவியது. 
		 
		சத்தியா 10 வயதிலேயே பண்டரி பஜனைக் கோஷ்டி என்ற பெயரில் ஒரு பஜனைக் குழுவை 
		அமைத்து பஜனை மூலம் கிராமம் முழுவதும் தெய்வீக அதிர்வுகளை உருவாக்கினார். 
		அந்த நேரத்தில் அயல் கிராமம் முழுவதும் வாந்திபேதி நோய் பரவி ஏராளமான 
		மக்களைக் கொள்ளை கொண்டது. ஆனால் புட்டபர்த்தியில் மட்டும் ஒருவருக்கும் 
		தொற்றவில்லை. பஜனையின் சக்தியே இதற்குக் காரணம் என உணர்ந்த அயல் கிராம 
		மக்கள் தங்கள் கிராமத்திற்கு வந்து பஜனை வைக்குமாறு அழைத்தனர். 
		 
		புக்கப்பட்டணத்தில் படிப்பை நிறைவு செய்து கொண்டு கமலாபுரத்தில் உள்ள 
		பாடசாலைக்குச் செல்லத் தொடங்கினார். அண்ணன் சேஷமராஜூ வீட்டில் 
		தங்கியிருந்தார். அங்கு குடிநீர் பிரச்சனை -இரண்டு குடங்களை காவடி போல் 
		கட்டி பல மைல் து}ரம் சென்று தண்ணீர் கொண்டு வர வேண்டும். ஒரு நாளைக்கு 
		இரண்டு தடவை போக வேண்டும். மிக மகிழ்ச்சியுடன் சேவையாகச் செய்து வந்தார் 
		சத்தியா. கிராம மக்களுக்கு சேவை செய்வதில் ஆனந்தம் கொண்டார். புஸ்பகிரியிலே 
		நடக்கும் கோவில் திருவிழாக்களில் பாடசாலையில் உள்ள சாரணர் இயக்கத்துடன் 
		சோ;ந்து பல சேவைப்பணியில் ஈடுபட்டார். சத்தியாவின் தெய்வீக ஆற்றல் கிராமம், 
		பட்டணம் எங்கும் பரவியது. நல்ல எழுத்தாளன், பாடகன், ஆசிரியர்களைவிட அறிவாளி, 
		நாட்டியத்தில் நிபுணன், இறந்த காலம், வருங்காலம் பற்றி சொல்லக்கூடியவன். 
		வெறுங்கையை அசைப்பதன் மூலம் மலர்கள், இனிப்புப் பண்டங்கள், மருந்து வகைகள், 
		வீபூதி . . . . முதலியவற்றை வரவழைத்துத் தரும் இணையற்ற சக்தியை கேட்டு 
		அனைவரும் ஆச்சாpயப்பட்டனர். பாடசாலையில் உள்ள எல்லா மாணவர்களும் சத்தியாவின் 
		அன்புத் தோழா;களாக விளங்கினார்கள். 
		 
		அதே வேளை தந்தை வெங்கப்பராஜூ, அண்ணன் சேஷமராஜூ இவ்வாறான விடயங்களை 
		விரும்பவில்லை. சத்தியா உயர்கல்வி படித்து நல்ல உத்தியோகம் பார்க்க 
		வேண்டும் என்று விரும்பினர். சத்தியாவின் போக்கு விசித்திரமாகவும் 
		பயமாகவும் இருந்தது. மருத்துவர், மந்திரவாதிகள் போன்றோரிடம் அழைத்துச் 
		சென்றனர். தெய்வீக சக்திக்கு முன்னால் எதுவும் செயற்பட முடியவில்லை. பல 
		சோதனைகள் செய்து பார்த்தார்கள் மாட்டு வண்டியில் ஏற்றி பக்கத்து 
		கிராமத்தில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முயன்றனர். அப்பொழுது 
		சத்தியா நான் எங்கும் போக விரும்பவில்லை, மாட்டு வண்டிக் காளைகளே 
		திரும்புங்கள் என்றார் காளைகள் ஓடவில்லை, வண்டி அசையவில்லை. ஒரு 
		மணித்தியாலம் இந்தப் போராட்டம் நடைபெற்று வண்டி நகரவில்லை. செய்வதறியாது 
		வீடு திரும்பினர். 
		 
		1940 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 28 ஆம் திகதி சத்தியா வழக்கம் போல் படுக்கையை 
		விட்டெழுந்தார், சிறிது நேரத்தில் வீட்டிலுள்ள வர்களையெல்லாம் தம்மருகே 
		அழைத்து தன் தெய்வீக சக்தியால் கற்கண்டும், மலர்களும் உருவாக்கி கொடுத்தார். 
		இதைக் கேள்விப்பட்ட அயல்வீட்டவர்களெல்லாம் விரைந்து வந்தனர். அவர்களுக்கும் 
		கை அசைவால் கற்கண்டும், வீபூதியும் கொடுத்தார். வெளியே சென்றிருந்த தந்தை 
		வெங்கப்பராஜூ இதைக் கேள்விப்பட்டு விரைந்து வந்தார். மிகவும் கோபம் 
		கொண்டவராய் இன்றோடு இம்மாதிரியான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க 
		வேண்டும் என்று விரும்பினார். தடியொன்றைக் கையில் எடுத்து சத்தியாவிற்கு 
		அருகே சென்று இந்த விளையாட்டெல்லாம் இன்றோடு நின்று விட வேண்டும். 
		இல்லையேல் அடித்து விடுவேன் என்று பயமுறுத்தினார். நீ கடவுளா! 
		பைத்தியக்காரனா! சொல் என்று உரத்த குரலில் கேட்டார் நான் சாயி பாபா என்று 
		பதில் வந்தது. வெங்கப்பராஜூ ஆச்சாpயத்தால் பேச்சிழந்து போனார். 
		கையிலிருந்த தடி தானே நழுவி விழுந்தது. அதைக் கேள்விப்பட்டு இன்னுமொருவர் 
		ஓடி வந்து நீ சாயி பாபா என்றால் அதை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று 
		சவால் விட்டார். ஆம் நிரூபித்துக் காட்டுகின்றேன் என்று கூறி கை நிறைய 
		மல்லிகை மலர்களை எடுத்து அதை தரை மீது வீசி விட்டு பாருங்கள் என்று கூறினார். 
		என்னே ஆச்சாpயம்! கீழே விழும் பொழுதே அவை எழுத்திலே சாயி பாபா என்று உருப் 
		பெற்று அமைந்ததை எல்லோரும் கண்டனர். சத்தியா ஒரு சாதாரண பையன் அல்ல என்பதை 
		எல்லோரும் உணர்ந்து கொண்டனர். எப்படியேனும் பள்ளி இறுதி வகுப்பை 
		முடித்துச் சத்தியாவை அரசாங்க உத்தி;யோகத்திற்கு தகுதி பெறச் செய்ய 
		வேண்டும் என்பதே அண்ணன் சேஷமராஜூவின் திட்டமாக இருந்தது> எனவே சத்தியாவை 
		அழைத்துச் சென்று உரவகொண்டாவிலுள்ள உயர் நிலைப் பள்ளியில் சோ;த்தனர். 
		உரவகொண்டாவிலும் சத்தியாவின் தெய்வீக சக்தியை அறிந்து கொண்டவர்கள் 
		வியாழக்கிழமையை புனித நாளாகக் கருதி பஜனைகளில் ஈடுபட்டனர்.  
		 
		சத்தியாவிற்கு 14 வயதிருக்கும் போது 1940 ஆம் ஆண்டு ஐப்பசித் திங்கள் 20 
		ஆம் நாள் சத்யா வழக்கம் போல் பள்ளிக்குப் புறப்பட்டார் அன்று சத்தியாவின் 
		தலையைச் சுற்றி தெய்வீக ஒளி வட்டம் பிரகாசித்தது. பள்ளிக்குச் சென்ற பாபா 
		சிறிது நேரத்தில் வீட்டிற்குத் திரும்பி வந்து விட்டார். வாசற் படியில் 
		நின்று கொண்டு புத்தகங்களையெல்லாம் வீட்டினுள்ளே வைத்து விட்டு நான் 
		இனிமேல் உங்கள் சத்தியா அல்லன் நான் சாயி பாபா என்று உரக்கக் கூறினார். 
		சமையலறையில் இருந்த சத்தியாவின் அண்ணி வெளியே எட்டிப் பார்த்தார். 
		அப்பொழுது பாபாவின் தலையைச் சுற்றிலும் வீசிக் கொண்டிருக்கும் 
		ஒளிப்பிழம்பைக் கண்டு அப்படியே கண்பூத்து நின்றார். பாபா அவரை நோக்கி நான் 
		போகிறேன்> நான் உங்களைச் சோ;ந்தவனல்லன்> மாயை ஓடிவிட்டது என்னுடைய 
		பக்தா;கள் என்னை அழைக்கிறார்கள்: எனக்கு வேலை இருக்கிறது> நான் இங்கு 
		இருக்க முடியாது என்று சொல்லிக் கொண்டே வீட்டை விட்டு வெளியே வந்தார். 
		அண்ணியார் கெஞ்சிப் பார்த்தார். எதுவித மாற்றமுமில்லை. இந்நிகழ்வைக் 
		கேள்விப்பட்ட அண்ணன் சேஷமராஜூ விரைந்து வந்து எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் 
		நான் சாயி பாபா, என் வேலை எனக்காக காத்திருக்கிறது என்று கூறியவாறு 
		அண்மையில் உள்ள தோட்டத்திற்குச் சென்று அங்கிருந்த பாறையொன்றின் மேல் 
		அமர்ந்து கொண்டார். (இனி சத்தியாவை சாயி பாபா என்று அழைப்போம்.) 
		 
		இச்செய்தி கிராமம் எங்கும் பரவி சாயி பாபாவைக் காண மக்கள் அத்தோட்டத்திற்கு 
		விரைந்து வந்தனர். எல்லோரும் பாபா சொல்லிக் கொடுத்த கீர்த்தனங்களை ஒன்று 
		சோ;ந்து பாடினர். முதன் முதலில் மானச பஜரே குரு சரணம் துஸ்தர பவசாகர சரணம் 
		என்ற கீர்த்தனம் பாபாவால் சொல்லிக் கொடுக்கப்பட்டது. அந்த நாம ஒலி அலைகள் 
		அத் தோட்டமெங்கும் பரவியது. இப் பாடலின் பொருள் குரு பெருமானின் பாதங்களை 
		மனதில் தியானம் செய்வாயாக! என்பதாகும். பாபா இனிமேல் பள்ளிக்கு வரமாட்டார் 
		என்ற செய்தி கேட்டு பள்ளி மாணவர்கள் மனமுருகி அழத் தொடங்கினர்.  
		 
		இச் செய்தி புட்டபர்த்தியிலிருக்கும் பெற்றோருக்கும் அறிவிக்கப் ;பட்டது. 
		மாலை பஜனை நடந்து கொண்டிருந்த வேளை அன்னை ஈஸ்வரம்மா தோட்டத்திற்குள் 
		வந்தார், பலவிதமான கதைகளைச் சொல்லி பாபாவை அழைத்துச் செல்ல முயற்சி 
		செய்தார். எதுவித மாற்றமுமில்லை. ஈஸ்வரம்மா அழுதும் தொழுதும் வேண்டினார். 
		சத்திய நாராயண பூசை செய்து தவமிருந்து பெற்ற பிள்ளை யல்லவா? சாயி பாபா 
		பிறப்பதற்கு முன்பு, அன்னை ஈஸ்வரம்மா கிணற்றடியில் சூரிய நமஸ்காரம் செய்யும் 
		பொழுது ஆகாயத்திலிருந்து நீல நிற ஜோதிப் பிழம்பு ஒன்று வந்து வயிற்றில் 
		புகுந்தது. அந்த ஜோதிப் பிழம்பே சாயி பாபா. சாயி பாபா பிறப்பதற்கு முன்பு 
		வீட்டில் பல அற்புதங்கள் நடைபெற்றது. இரவு வேளைகளில் வீட்டிலுள்ள மிருதங்கம் 
		மற்றும் இசைக் கருவிகள் தாமாகவே இசையொலி எழுப்பி எல்லோரையும் 
		ஆச்சாpயத்தில் ஆழ்த்தின. உலக மக்கள் எல்லோரையும் வழி நடத்த வந்த பிள்ளையை 
		ஒரு தாயன்புக்குள் கட்டிப் போடலாமா? 
		 
		சில நாட்களுக்குப் பின்பு பெற்றோர்கள் அவருக்கு எதுவித தொந்தரவும் 
		கொடுப்பதில்லையென்றும் பாபா விரும்பியவாறு பக்தா;களைச் சந்திக்கலாம் 
		என்றும் உறுதி மொழி கூறி புட்டபர்த்திக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சில 
		நாட்கள் அன்னை ஈஸ்வரம்மா விருப்பத்திற்கேற்ப வீட்டில் தங்கியிருந்து விட்டு 
		கிராம கா;ணமாகிய அந்தணர் வீட்டில் தங்கினர். அவ்வந்தணரின் மனைவி சுப்பம்மா 
		பாபாவையும் பக்தா;களையும் அன்போடும் ஆதரவோடும் தம்முடைய விசாலமான வீட்டில் 
		வரவேற்றார். வருகின்ற எல்லோருக்கும் அன்போடு உணவளித்து எல்லா வசதிகளையும் 
		செய்து கொடுத்தார். 
		 
		பக்தா;கள் பெரும் கூட்டமாக வரத்தொடங் கினார்கள். எல்லோரையும் வரவேற்க 
		கொட்டில்கள், கூடாரங்கள் போடப்பட்டது. வந்தவர்களுக்கெல்லாம் உணவளிக்குமாறு 
		பாபா கூறினார். சில வேளைகளில் சமைத்த உணவு போதுமானதாக இருக்கவில்லை> இதை 
		பாபாவிற்கு தொpயப்படுத்தினால் இவர் இரண்டு தேங்காய்களை எடுத்து 
		ஒன்றோடொன்று அடிப்பார் அதிலிருந்து வரும் இளநீரை சோறு கறி எல்லாவற்றிலும் 
		தெளிப்பார், உணவு பெருகத் தொடங்கி விடும். எல்லோருக்கும் தாராளமாகக் 
		கொடுத்து மிஞ்சியும் விடும்  
		 
		சில வேளைகளில் கூட்டம் அதிகமானால் அண்மையில் உள்ள சித்ராவதி நதிக் கரைக்கு 
		அழைத்துச் சென்று மணலில் இருப்பார்கள். அங்கு பாபா பக்தா;கள் கேட்கும் 
		கேள்விகளுக்கும் பதிலளிப்பார். ஒவ்வொரு வருடைய பிரச்சனைகளையும் அன்போடு 
		கேட்டறிவார். மணலைக் கையில் எடுத்து கற்கண்டாக, லட்டாக மாற்றிக் கொடுப்பார். 
		பெரிய விக்கிரகங்களை உருவாக்கிக் கொடுத்து ஒழுங்காக பூசை வழிபாடு 
		செய்யுமாறு கூறுவார். ஒரு முறை மணலை எடுத்து அதை சிறிய கீதைப் புத்தகமாக 
		மாற்றி ஒரு பக்தாpடம் கொடுத்தார். கதைத்துக் கொண்டிருக்கும் சில வேளைகளில் 
		திடீரென பாபா மறைந்து விடுவார். இதோ இங்கே இருக்கிறேன் என்று 
		குன்றுகளிலிருந்து கூவி அழைப்பார். சித்திராவதி நதிக்கண்ம ையிலுள்ள பாறையின் 
		மேல் ஒரு புளிய மரம் இருக்கிறது. இந்தப் புளிய மரத்திலிருந்து தனது மாணவ 
		தோழா;கள் கேட்கும் பழங்களை பறித்துக் கொடுப்பார். வாழைப்பழம், அப்பிள் 
		பழம், தோடம்பழம் என என்ன பழம் கேட்டாலும் புளிய மரத்திலிருந்து தெய்வீக 
		சக்தியால் பறித்துக் கொடுப்பார். சில வேளைகளில் சில பக்தா;களுக்கு 
		விரும்பிய தெய்வீகக் காட்சிகளை காண்பிப்பார். சீரடி சாயி பாபா, தசாவதாரக் 
		காட்சிகள், ராமராக, கிருஸ்ணராக . . . காண்பித்துள்ளார். 
		 
		ஒரு பக்தா; நீங்கள் கடவுளா? என்று கேட்டார். ஆம் நான் கடவுள், ஆனால் நீயும் 
		கடவுள் தான். என்ன வித்தியாசம்? நான் கடவுள் என்று எனக்குத் தொpயும். நீ 
		கடவுள் என்று உனக்குத் தொpயாது. இந்த உண்மையை உங்களுக்கு உணர்த்தி வழி 
		காட்டவே நான் வந்துள்ளேன். நீங்கள் எல்லோரும் தெய்வீகத்தின் ஒரு பொறி. 
		உங்களுக்கு உள்ளே அளப் பெரும் சக்தி - தெய்வீகம் உள்ளுறைகின்றது. அந்த 
		உள்ளுறையும் தெய்வீகத்தை வெளிக் கொணர்வதே எஜூகெயர் என்னும ; வேதம் ஆகும். 
		 
		பக்தா;கள் நாலாபுறத்திலுமிருந்தும் வந்து கூடலாயினர். பாபா பல அற்புதக் 
		காட்சிகளை காட்டும் செய்தி எங்கும் பரவியது. தீராத நோய்கள் பல பாபாவின் 
		கரம் பட்டவுடன் மறைந்து விட்டன. மைசூர் அரச வம்சத்தினர் தாpசனம் பெற 
		வந்திருந்த நேரம் ஒரு பக்தா; நாட்பட்ட குடற் புண்ணால் 
		அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். ரண சிகிச்சைக்கு வேண்டிய ஆயுதங்கள் யாவையும் 
		உருவாக்கி, சத்திர சிகிச்சை செய்து பூரண குணமடையச் செய்தார். பக்தா; கூட்டம் 
		பெருகத் தொடங்கியது. பக்தா;களுக்கு இடமளிப்பதற்கு பழைய மந்திர் என்று இன்று 
		சொல்லப்படும் கட்டிடம் கட்டப்பட்டது. இதற்கிடையில் சென்னைக்கு விஜயம் 
		செய்து அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு காட்சியளித்தார். ஒரு நாள் 
		கடற்கரை மணலில் கடலை நோக்கி நடந்து சென்ற பாபாவைக் காணவில்லை. பக்தா;கள் 
		சிறிது நேரம் செய்வதறியாது திகைத்து நின்றனர். கடலில் இருந்து வந்த ஒரு 
		சத்தம் கேட்டு கடலை உற்று நோக்கினர். ஆ ஆ அங்கே ஆதிசேஷன் மீது மகாவிஷ்ணு 
		பள்ளி கொள்ளும்காட்சி. மறுகணத்தில் பாபா அவர்கள் பக்கத்தில் நின்று 
		கொண்டிருந்தார். அவருடைய ஆடைகள் நனையவில்லை. 
		 
		பக்தா;கள் கூட்டம் கணக்கிலடங்காது வரத் தொடங்கியது. சாயி பாபா இதுவரை 
		உகண்டாவைத் தவிர வேறெந்த நாட்டிற்குமே சென்றதில்லை. அன்பெனும் காந்த 
		சக்தியால் கவரப்பட்டு 167 நாடுகளிலுமிருந்து மக்கள் திரண்ட வண்ணம் உள்ளனர். 
		பக்தா;களின் வசதி கருதி 1950 ஆம் ஆண்டு கார்த்திகை திங்கள் 23 ஆம் திகதி 25 
		ஆவது பிறந்த தினமன்று பிரசாந்தி நிலையம் என்னும் புதிய கட்டிடம் திறந்து 
		வைக்கப்பட்டது. பாபாவே பொறியியல் வல்லுனராக இருந்து கட்டிடம் கட்டப்பட்டது. 
		சில வேளைகளில் பாரம் து}க்கும் வாகனங்கள் பழுதடைந்து விடும் அவ்வேளையில் 
		பாபா வீபூதியை து}வி வாகனத்தை ஓடச் செய்வார். பிரசாந்தி என்றால் அமைதியின் 
		இருப்பிடம். உலக மக்கள் அனைவரின் அமைதி புட்டபர்த்தி பிரசாந்தி 
		நிலையத்திலிருந்து வெளிவருகிறது. ஒவ்வொருவருடைய இதயமும் பிரசாந்தியாக 
		வரவேண்டும். பிரசாந்தியாக வேண்டுமானால்.... 
		 
		எல்லோரிடத்தும் அன்பு வைத்து> எல்லோருக்கும் சேவை செய்து - 
		எல்லோரிடத்தும் உள்ளுறையும் தெய்வீகம் தான் உன்னிடத்தும் உள்ளுறைகின்றது 
		என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உன்னிடத்தில் உள்ளுறையும் தெய்வீகம் தான் 
		எல்லோரிடத்தும் உள்ளுறைகின்றது என்ற உண்மை தெளிவானால் உன் உள்ளமும் 
		பிரசாந்தி தான். 
		 
		எல்லோருக்கும் உதவி செய் 
		உதவி செய்யா விட்டாலும் தீங்கு செய்யாதே 
		என்பது சத்திய சாயி பாபாவின் அமுத மொழி. 
		 
		அவர் தன்னைச் சூழ்ந்திருந்தோர் மத்தியில் நன்னெறிகளை ஆழமாகப் பதிய 
		வைப்பதில் மிகக் குறியாக இருந்தார். குறிப்பாக உண்மை, நேர்மை, நீதி, நியாயம் 
		ஆகிய குணவியல்புகள் கடைப்பிடிக்கப்படல் வேண்டுமென்பதற்கு மிக முக்கியத்துவம் 
		அளித்துள்ளார். அத்துடன் எத்தகைய வடிவத்தில் அமைவும் வன் செயலையும் மிக 
		உறுதியுடன் நிராகாpத்துள்ளார். 
  
		பலவருடங்களுக்கு மேலாக அன்றாடம் 
		தாம் நிகழ்த்துகின்ற
		அற்புதங்களின் மூலம் பகவான் சாயி பாபா இலட்சோப லட்சம் பக்தா;களைத் 
		தம்பால் ஈர்த்துள்ளார். அவர் எணக் கணக்கற்ற நோயாளர்களைக் 
		குணப்படுத்தியுள்ளார். இயற்கை மீது தமக்கிருக்கும் சக்தியை செயலில் 
		வெளிப்படுத்தியுள்ளார். இறப்பின் விளிம்பிற்கு சென்றுவிட்ட பலருக்கு
		உயிர்ப்பிச்சை அளித்துள்ளார். காற்று வெளியிலிருந்து
		பொருட்களை
		உருவாக்கியுள்ளார். பக்தரகளின் கடந்தகாலம், நிகழ்காலம், 
		எதிர்காலம் வாழ்க்கையைப் பற்றிக் கூறியுள்ளார். அற்புதம் ஒரு அறிமுக அட்டை 
		இது இயற்கையான தெய்வீக இயல்பு. பக்தனுடைய அன்பு - இறைவனுடைய அன்பை 
		சந்திக்கின்ற பொழுது இயல்பாகவே அற்புதங்கள் நடைபெறுகின்றன. 
		மார்க்கண்டேயரின் உள்ளார்ந்தமான பிரார்த்தனை இயற்கை சட்டங்களையும் 
		மாற்றியமைத்து மரணத்தின் பிடியிலிருந்து காக்கவைத்தது. உள்ளத்து}ய்மை (திரிகரண 
		சுத்தி) சிந்தனை - சொல் - செயல் ஒன்றாய் இருத்தல். ஒன்றாய் இருந்தால் 
		நன்றாய் நடக்கும்.  
		இன்று பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான சாயி இலக்கியங்கள் வெளி வந்து 
		கொண்டிருக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் உங்களுக்கு அண்மையிலுள்ள சாயி 
		நிலையங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். சத்தியம் - சிவம் - சுந்தரம் பாகம்
		
		
		I, II, III, IV, V - 
		சுவாமி பாகம் I, II போன்ற 
		புத்தகங்களில் ஓரளவு விரிவாக அறிந்து கொள்ளலாம். 
   | 
		
		 |