| 
					  
					
					
					அகண்ட பஜனை 
					
					
					பகவான்  சிறி சத்திய சாயி பாபா அவர்கள் அவதரித்த நவம்பர் 
					மாதத்தில் முதல் வரும் வார இறுதி நாட்களில் 24 மணி நேர அகண்ட 
					பஜனை பகவானின் விருப்பப்படி நடாத்தப்பட்டு வருகிறது. இது 
					உலகளாவிய ரீதியில் நடத்தப்படும் ஒரு பெரும் சாதனை. இதன் 
					மகத்துவத்தைப் புரிந்து கொண்டு ஒவ்வொரு சாயி நிலைய 
					உறுப்பினரும் முழு ஈடுபாட்டுடன் பங்குபற்ற வேண்டுமென்பதை 
					உணர்த்துவதற்காகவே இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
					 
					
					
					1) கர்ம வினை 
					2) அதிர்வுகள் 
					
					
					 
					1) கர்மவினை: கர்மவினை என்பது> 
     1) தனி மனித கர்மவினை 
     2) சமுதாய கர்மவினை 
     3) இயற்கையின் கர்மவினை 
     4) தெய்வ சங்கற்பம் என நான்கு பிரிவுகள் உண்டு. 
					 
					1) தனி மனித கர்மவினை 
					இது ஆன்மீகத்தில் ஈடுபட்ட எல்லோரும் அறிந்த விடயம். முன்னைய 
					பிறப்புக்களில் நாம் செய்த வினைகளை இப்பிறப்பில் அனுபவிப்பது. 
					 
					2) சமுதாய கர்மவினை 
					ஒவ்வொரு சமூகத்திற்கும் கா;மவினை உண்டு. இது கூட்டுக் கா;மவினை 
					எனப்படும். உதாரணமாக: எறும்புகள் கூட்டமாக வாழும் இயல்புடையன 
					கால் வைத்தவுடன் கடிக்கும் இயல்புடையன. எமது வீட்டுச் 
					சுற்றாடலில் எறும்புகள் வசிப்பதை நாம் விரும்புவதில்லை. ஆகவே 
					எறும்பு கொல்லி மருந்துகளைப் போட்டு முழு எறும்பையுமே அழித்து 
					விடுகிறோம். எம்மைக் கடித்த எறும்பை மட்டுமல்ல. அந்த எறும்பு 
					சமூகத்தையே அழிக்கப்பார்க்கிறோம். எறும்பின் கடிக்கும் இயல்பு 
					எம்மை அதன் மீது வெறுப்பை ஏற்படுத்தி அதனை அழிக்க வேண்டுமென்று 
					எண்ணம் தோன்றி விடுகிறது. அதுவும் இறைவன் படைப்பு என்ற எண்ணம் 
					வருவதில்லை. 
					
					
					இது போலதான் சமூகத்திலுள்ள ஜாதிப்பிரிவுகள்> மதாPதியான 
					பிரிவுகளுக் கிடையே சில வெறுப்புணர்வுகள் உலகளாவிய ரீதியிற் 
					பரந்து காணப்படுகிறது. சண்டைகளுக்கும்> யுத்தங்களுக்கும் 
					அடிப்படைக் காரணம் இத்தகைய சமூக வெறுப்புணர்வுகளே. இது 
					சமூகத்தின் கூட்டுக் கா;மவினை எனப்படுகிறது.  
					 
					3) இயற்கையின் கர்மவினை 
					மழை பெய்வது இயற்கை. ஒரு திருமண வைபவம் நடைபெறவுள்ளது. அன்று 
					மழை பெய்யக்கூடாது என்று திருமண வீட்டுக்காரர் மழைக் கடவுளை 
					வேண்டிப் பிரார்த்திக்கின்றனர். ஒரு விவசாயி தனது பயிர் தண்ணீர் 
					இன்றி வாடுகிறதே என மழைக்கடவுளைப் பிரார்த்தித்து உடனே மழை 
					பெய்ய வேண்டுமென வேண்டுகிறார். இதனைத் தீர்மானிப்பது மழைக் 
					கடவுளின் சங்கற்பம். இது இயற்கையின் கா;மவினை எனப்படும். 
					சூறாவளி> புயல்> வெள்ளப்பெருக்கு> சுனாமி என்பன இயற்கையின் 
					சீற்றங்கள்> இயற்கையின்; கா;மவினையாகும். 
					 
					4) தெய்வசங்கற்பம் 
					தனிமனித கர்மவினை> கூட்டுக் கர்மவினை> இயற்கையின் கர்மவினை 
					இவைகளை ஒழுங்குபடுத்தி தர்மத்தை நிலைநாட்டுவது தெய்வ சங்கற்பம் 
					எனப்படும். 
					
					
					அடுத்ததாக அதிர்வுகள் பற்றி பார்ப்போமானால்: ஒரு ஆன்மீக 
					நாட்டமுடையர் இறைபக்தியாளருடன் நாம் பேசும் போது அவரின் முன் 
					நிற்பது ஒரு சாந்தியைத் தருகின்ற ஒரு சந்தா;ப்பமாக அமையும். 
					நாங்கள் புட்டபர்த்தி சூழலிலேயோ அல்லது பகவான் முன்னிலையி;ல் 
					அமர்ந்திருக்கும் போது அங்கு ஒரு தெய்வீக சூழ்றிலையை 
					அனுபவித்துள்ளோம். அங்கு செல்வதையே ஒரு பாக்கியமாக 
					எண்ணுகிறோம். அந்த இடத்தில் ஒரு தெய்வீக நல்ல அதிர்வுகள் 
					இருப்பதை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்கிறது. இதே போல் எங்கள் 
					நிலையங்களிலும் ஒரு தெய்வீக அதிர்வுகள் இருப்பதை> இருக்க 
					வேண்டியதை நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். இது அங்கு 
					நடைபெறும்> பஜனை> தியானம்> சத்சங்கம் போன்ற சாதனைகள் மூலமாக 
					சாந்நித்தியம் பெறுகிறது. பகவான் பாபா நகரசங்கீர்த்தனத்தைப் 
					பற்றி உயர்வாக குறிப்பிட்டு இச்சாதனை ஒவ்வொரு சாயி 
					நிலையத்திலும் நடைபெற வேண்டுமென விதித்துள்ளார். நகர 
					சங்கீர்த்தனம் நடைபெறுவதன் நோக்கம் அந்தப் பிரதேசத்தில் ஒரு 
					சாந்தியை ஏற்படுத்தி> வேற்றுமை உணர்வுகளை நீக்கி ஒற்றுமை உணர்வை 
					ஏற்படுத்தும். 
					 
					பஜனை சுற்றாடலில் நல்ல அதிர்வுகளை ஏற்படுத்த வல்லது. இதனால் 
					நாங்கள் வீடுகளில் பஜனை அல்லது தேவாரம்> இறைவன் புகழைப் பாடும் 
					பாடல்கள் படிக்கும் போது குடும்பத்தில் நல்ல அதிர்வுகளும் 
					சாந்தியும் ஏற்பட வேண்டுமென எதிர் பார்த்து காலையும் மாலையும் 
					பிரார்த்தனையில் ஈடுபடுகிறோம்.  
  
					
					
					அகண்ட பஜனை வருடாந்தம் 24 மணி நேரம் தொடர்ச்சியாக உலகம் 
					முழுவதும் கொண்டாடப்படுவதன் நோக்கம் பூமி ஒரு தடவை 
					தன்னைத்தானே சுற்றிவர எடுக்கும் நேரம் 24 மணித்தியாலம். இந்த 
					24 மணி நேரமும் உலகம் முழுவதிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான 
					நிலையங்களிலிருந்து பஜனை ஒலி அதிர்வுகள் புறப்படும் போது உலகம் 
					முழுவுதிலுமுள்ள தீய எண்ணங்கள்> கவலைகள்> கோபம்> பொறாமை> 
					போர்ச்சிந்தனைகள் ஆகிய கெட்ட அதிர்வுகள் எல்லாம் 
					மட்டுப்படுத்தப்பட்டு நல்ல அதிர்வுகளை ஊக்குவிக்கும் என்ற 
					பரந்த நோக்கிலேயே பகவான் பாபா இந்த உலகளாவிய பஜனை சாதனையைத் 
					தந்துள்ளார். சாயி நிலையங்கள் இன்று உலகம் முழுவதும் பரந்து 
					ஐக்கிய நாடுகள் சபைக்கு அடுத்தபடியாக கூடிய எண்ணிக்கை உடைய 
					நாடுகள் அங்கம் வகித்து ~~சத்திய சாயி உலக கவுன்சில்|| என்ற 
					அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. உலகளாவிய ரீதியில் பரந்து 167 
					நாடுகளில் சாயி பஜனை நிலையங்கள் செயற்படுகின்றன. இவ்வளவு 
					நாடுகளிலுமிருந்து புறப்படும் பஜனை அதிர்வுகள் நிச்சயமாக 
					பிரபஞ்சம் முழுவதும் பரவி நல்ல அதிர்வுகளை உலகம் முழுவதும் 
					ஏற்படுத்துவதுடன் சமூக கா;ம வினைகளையும் அழிக்கும் தன்மை 
					ஏற்படுகிறது. இப்படி ஒரு உலகளாவிய சாதனையை நடாத்தி முடிக்க 
					அவதாரத்தினால் மட்டுமே முடியும்! 
					 
					இந்த அகண்ட பஜனையில் கலந்து கொள்பவரின் தனிமனித கா;மவினை> 
					சமுதாயத்தின் கா;மவினை> இயற்கையின ;கா;மவினை எல்லாம் 
					குறைக்கப்பட்டு சாந்தியை ஏற்படுத்தும். 
					 
					ஆகவே சாயி நிலையங்களின் எல்லா உறுப்பினர்களும் இந்த உலகளாவிய 
					மாபெரும் சாதனையில் இணைந்து உலகளாவிய ஒருமைத்தன்மையை உணர்ந்து 
					கொள்ள வேண்டும். 
					 
					 
  
					 
					நவராத்திரி 
					
					போக மோசஷப் பிரதாயினியாகிய 
					அம்பிகை இகலோக இன்பங்களையும் ஈஈற்றில் முக்தி இன்பங்களையும் 
					ஒரு சேர வழங்கக் கூடியவள் என்பதால் அவளை ஆராதித்து 
					அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் நவராத்திரி விரதம் மகிமை 
					வாய்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. புரட்டாதி மாத சுக்கிலபட்சஷப் 
					பிரதமை முதல் நவமி ஈறாக வரும் 9 நாட்களும் துர்க்கை - இலக்குமி 
					- சரஸ்வதி என்ற முப்பெருந்தேவியர் ஆராதிக்கப்பட்டு 10 ஆம் நாள் 
					விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவ + இராத்திரி 
					என்பது 9 இரவுகளைக் குறிக்கிறது. இவ் விரதத்தின் விசேடம் கும்ப 
					பூஜை யாகம் வளர்த்தல் - லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை - தேவி 
					மகாத்மிய பாராயணம் என்பன இந் நாட்களில் நடைபெறும். வட 
					இந்தியாவில் இந்தப் 10 நாள் விழாவை தசரா என்று அழைப்பர். 
					வீடுகளிலும் பாடசாலைகளிலும் நவராத்திரி பூஜை ஒரு ஆனந்தமயமான 
					கொண்டாட்டமாகும். கொலு மண்டபம் அமைத்தல். சுமங்கலி பூஜை 
					செய்தல் என்பன வீடுகளில் இவ் விழாவின் முக்கிய அம்சங்களாகும். 
					நவராத்திரியின் 8 ஆம் நாளாகிய மகாநவமி சரஸ்வதி பூஜையாகவும் 
					ஆயுத பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது. பத்தாம் நாளாகிய விஜயதசமி 
					அன்று மகிஷாசுர வதத்தைக் குறிக்கும் முகமாக வன்னி வாழை 
					வெட்டுதல் நடைபெறும். வித்தியாரம்பம் செய்யப்படுவதும் அன்றே 
					ஆகும். 
					
					 
					இவற்றை யொட்டி பல புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன. 
					தேவியானவள் மகிஷன் என்ற அசுரனை அழிக்க 9 நாட்களும் சிவனைப் 
					பூஜித்து அவரது அருள் பெற்று 10 ஆம் நாள் அழித்ததாகச் 
					சொல்லப்படுகிறது. மேலும் இராமன் சீதையைத் தேடிப் புறப்பட்ட 
					போது வன்னி மரத்தை வணங்கியதாகவும். பாண்டவர்கள் தமது அஞ்ஞான 
					வாசத்தின் போது தங்கள் ஆயுதங்களை வன்னி மரத்தில் 
					வைத்திருந்ததாகவும் சொல்லப் படுவதே வன்னி மர வழிபாட்டுக்கான 
					ஐதீகம். இவ் விரதத்தைக் கைக் கொண்டு பேறு பெற்றோர் பலர் என 
					புராணங்கள் பகர்கின்றன. நல்ல எண்ணங்களை வாழ்வில் கடைப் 
					பிடிப்பதற்காகவும் வாழ்வில்  வலிமையும் வல்லமையும் 
					தருவதற்கே தூர்க்கா - இலக்குமி- சரஸ்வதி என்ற 3 தேவியரும் 
					நவராத்திரி விழாவின் போது வழிபடப்படுகின்றனர். நல்ல எண்ணங்கள் 
					-  நல்ல சொற்கள் - நல்ல செயல்கள் என்றிவையே இந்த மூன்று 
					தேவியரின் தத்துவமாக விளங்குகின்றன. எமக்கு நல்லதைக் 
					கற்பிப்பவர் சரஸ்வதி தேவியின் அம்சமாகிறார். எமக்குத் தீயதைக் 
					கற்பிப்பவர் அசுரருக்குச் சமம். அவர்களையே தூர்க்கை அழிக்கிறாள். 
					சுவாமி சொல்கிறார் தூர்க்கை - இலக்குமி - சரஸ்வதி என்ற மூன்று 
					தேவியரும் உன்னிடமிருந்து வேறுபட்டவர் அல்லர். உனது சொந்த 
					இருதயத்திலேயே அவர்கள் நன்கு நிறுவப்பட்டுள்ளனர். நீ மனிதப் 
					பிறவியாக இருப்பதால் மனிதனாக வாழ வேண்டுமென்று உன்னைத் துரண்டி 
					வற்புறுத்துகின்றனர். மனிதனுக்கு அம் மூவரும் மூன்று 
					தாய்மார்கள் தூர்க்கை அனைத்து ஆற்றலின் வடிவம். சரஸ்வதி 
					ஞானத்தின் திருவுருவம். இலக்குமி இகபர செல்வங்களின் வடிவம். 
					தூர்க்கை தமோ குணத்தையும். இலக்குமி சத்வ குணத்தையும். சரஸ்வதி 
					ரஜோ குணத்தையும் குறிக்கின்றனர். தூர்க்கா - லஷ்மி - சரஸ்வதி 
					என்ற குணவடிவங்கள் மூலம் பிரகிருதியை வழிபடுவதே இந்த 
					நவராத்திரியின் சிறப்பு. பரமாத்மா என்பது நேர்மறை பிரகிருதி 
					என்பது எதிர்மறை  இவ்விரண்டும் இணைந்தால் தான் படைப்பே 
					சாத்தியமாகும். படைப்புக்கு பிரகிருதியே மூல காரணம். 
					
					 
					காயத்திரி மந்திரம் ஓம் பூர் புவஸ்ஸுவ: என்று தொடங்குகிறது. 
					பூ எனப்படுவது - ஸ்துரலமாவதைக் குறிக்கிறது. புவஹ் என்பது 
					ப்ராண சக்தியினை அதாவது அதிர்வினைக் குறிக்கிறது. சாவித்திரி 
					தான் பிராண சக்தியின் மேல் ஆதிக்கம் கொண்டு அதன் அதிர்வுகளைச் 
					சீர்படுத்திக் காப்பாற்றுகிறாள். காயத்திரி நமது புலன்களை 
					வெற்றி கொள்வதற்கு உதவி செய்கிறார். சரஸ்வதி நமக்கு இடையறாது 
					ஒன்றிணைந்த விழிப்புணர்வை  வழங்குகிறாள். அதுவே மாறாத 
					என்றுமுள்ள ஞானமாகும். தேவியின் வடிவங்களான காயத்திரி - 
					சாவித்திரி - சரஸ்வதி என்ற மூன்று தெய்வ ஆற்றல்களும் மனிதனின் 
					உள்ளேயே இருக்கின்றன. ஆயினும் அவற்றை அறிந்து உணர்ந்து 
					அனுபவித்து மகிழ மனிதனால் இயலவில்லை. நமது நல்ல பழக்கங்கள் 
					அனைத்தும் கெட்ட பழக்கங்களாக மாறி விட்டதுதான். இதற்குக் காரணம் 
					என்கிறார் பகவான். 
  
					
					நவராத்திரி மனிதனுக்கு நவவிதமான 
					உள்ளுணர்வுகளை எடுத்துக்காட்ட ஏற்பட்டது தான். 
					நவராத்திரியிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஏக ஆத்ம 
					பாவம். நவவிதமாகக் காட்சியளித்தாலும் அவை கற்றுத் தருவது ஒரே 
					பாவம் ஒரே சத்தியம். ஒன்பது வகை சக்திகள் மனிதனை ஆக்கிரமிக் 
					கின்றன. இந்த சக்திகளின் மறு பெயர் ஆத்மா. ஆத்மா எங்கும் 
					இருக்கிறது. ஒரு மனிதனிடத்தில் உள்ள ஆத்மா தான் எல்லோரிடத்தும் 
					காணப்படுகிறது. ஆகவே எமது நபழ என்கிற அகங்காரத்தை உடனடியாகக் 
					கைவிட்டு ஆத்ம தத்துவத்தின் மேல் நம்பிக்கை ஏகாத்ம உணர்வின் 
					மேல் லயிக்க வேண்டும் என்று எமக்கு அறிவுறுத்துகிறார் பகவான். 
					விஜயதசமி சாயி அடியார்களுக்கு ஒரு முக்கிய தினமாகும். ஏனெனில் 
					அன்று தான் சீரடி சாயி மகா சமாதி அடைந்தார். அவர் 
					சமாதியடைவதற்கு சற்று முன்னர் லஷ்மிபாய் என்ற பெண்மணிக்கு 9 
					நாணயங்கள் கொடுத்தார். அவை நவவித பக்தியான ஸ்ரவணம் (இறை 
					புகழ்கேட்டல்)- கீர்த்தனம் (இறை புகழ் பாடுதல்)- விஸ்ணுஸ்மரணம் 
					(இறைவனின் பெயரைத் தியானித்தல்)- பாதஸேவனம் (பாத சேவை)- வந்தனம் 
					(வணங்குதல்)- அர்ச்சனம் (வழிபாடு)-  தாஸ்யம் (பணிவிடை 
					செய்தல்)- ஸ்நேகம் (நட்பு)- ஆத்மநிவேதனம் (சரணாகதி)என்பவற்றைக் 
					குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. நவராத்திரியின் போது தெய்வீக 
					அன்னையைப் பலவடிவங்களில் வழிபடுகிறோம். ஆயினும் எல்லாம் ஒன்றே. 
					இரண்டல்ல. இந்த ஏகாத்ம தத்துவத்தை நவவித பக்தியை அனுசரிப்பதன் 
					மூலம் நவராத்திரி காலத்தை உணர்ந்து எம் வாழ்வில் வெற்றியடைவோம். 
  
					 
			விநாயக சதுர்த்தி 
			
			 
			
			விநாயக 
			விரதங்களுள் மிக விஷேசமானது இது. விநாயகப் பெருமான் உற்பவமான தினம் இது 
			என்பர். ஆவணி மாத வளர்பிறைச் சதுர்த்தித் திதியன்று இவ் விரதம் 
			அனுஷ்டிக்கப் படுகிறது.கந்தபுராணத்தில் சிறப்பித்துக் கூறப்படும் 
			இவ்விரத மானது சூதமுனிவரால் பஞ்ச பாண்டவருக்கு உபதேசிக்கப் பட்டதாகும். 
			தமயந்தி நளனை மீண்டும் அடைந்ததும். கிருஷ்ணர் ஜாம்பவதியையும் 
			சியமந்தகமணியையும் பெற்றுக் கொண்டதும் இராமன் சீதையை மீட்டதும் 
			இந்திரன் அசுரப் பகையை வென்றதும் பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு 
			வந்ததும் இந்த விரத மகிமையினால் தான் என்று கூறப்படுகிறது. இவ்விரதம் 
			21 ஆண்டுகள் தொடர்ந்து அனுஷ்டிக்கப்பட வேண்டும். மாதந்தோறும் வரும் 
			பூர்வபட்ச சதுர்த்த நாட்களும் விநாயகருக்குரிய விரத நாட்களாகும். 
			விநாயகப் பெருமான் அடியவர்களுக்கு எளியவராக அருளுகின்ற தன்மை, அவரது 
			பெருமை, அவரது பெயர்கள் தாங்கியிருக்கும் தத்துவ உள்ளடக்கம், விநாயக 
			வழிபாட்டு முறைகள், அவருக்குப் படைக்கப்பட வேண்டிய நைவேத்தியங்கள் 
			போன்ற பல்வேறு அம்சங்களின் விரிவான விளக்கங்களை பகவான் பிரசாந்தி 
			நிலையத்தில் ஒவ்வோர் ஆண்டும் விநாயக சதுர்த்தியன்று அருட்பிரவாகமாகப் 
			பொழிகிறார். தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாதவர் விநாயகா 
			குருவிற்கெல்லாம் குருவானவர். எனவே புதிய வேலைகளைத் தொடங்கும் போது 
			விநாயக பூசையோடு வேலையைத் தொடங்குங்கள். உங்களுக்கு அவரது ஆசி 
			கிடைக்கும். உங்கள் வேண்டுதல்களும் வெற்றி பெறும் என்று விநாயக 
			அடியார்களுக்கு உறுதி கூறுகிறார் நம் ஸ்வாமி. கணபதி என்ற சொல்லுக்கு 
			பகவான் சொல்லும் விளக்கம் அடியார்களை விழிப்படையச் செய்கிறது. கணபதி 
			என்பவர் ஆன்மீக அறிவிற்கும், புத்திக்கும் அதிபதி. கணங்களுக்கெல்லாம் 
			பதியானவர். விஞ்ஞானம், சுக்ஞானம், பிரக்ஞானம் நிரம்பியவர். எனவே மாணவர் 
			ஒவ்வொருவரும் அவரை வழிபட்டு அவரைத் தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டும். 
			விநாயகரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு உங்கள் படிப்பைத் 
			தொடந்தீர்களானால் கல்வியின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெறுவீர்கள் 
			என்கிறார் பகவான். விநாயகா; அன்பின் கடவுள். அவர் அன்பை மழைபோல் 
			பொழிவார். அவரே தெய்வீகமான தாயும் தந்தையுமாவார். எங்கே மக்கள் அவரை 
			பக்தியுடன் உண்மையாகப் பிரார்த்தித்து தமது தீய குணங்களை விட்டொழித்து 
			விடுகிறார்களோ அங்கே அவர் பிரத்தியட்ச மாகிறார். அவர் குணாதீதா அவர் 
			நிர்குணம், நிரஞ்சனம், சனாதனம், நிகேதனம், நித்திய, சுத்த, புத்த, 
			முக்த, விநிர்மல ஸ்வரூபினன். அவருக்கு மிகவும் தூய்மையான மனம். 
			சித்தியும், புத்தியும் (வெற்றியும், அறிவும்) அவரது இரண்டு கண்கள். 
			அவற்றைத் தன் துணைவியராகக் கருதினார். விநாயகர் வேதங்களில் கணேசரை 
			வணங்கும் வழிபாடுகள் பற்றிய குறிப்புக்கள் இருக்கின்றன. இசையிலும் கூட 
			கணேச வணக்கமே முதலிடம் பெறுகிறது. உலகின் முதல் ஓசை ஓம்காரம். மற்றையவை 
			எல்லாம் ஓங்காரத்தின் மறுவடிவங்களான விகாரங்கள். விநாயகா; இந்த 
			அதிர்வுகளின் தலைவர். அவர் எமக்கு நிரந்தரமான என்றும் நிலைக்கும் 
			ஆனந்தத்தை அளித்து எம்மை பந்தங்களிலிருந்து விடுதலை பெற்றுக் கொள்ள 
			உதவுகிறார். மனக்கட்டுப்பாட்டை உருவாக்கிக் கொள்ள விநாயக வழிபாடு 
			அவசியம். விநாயகா; எதுவும் பிரதிச் செயல் புரியவில்லை எனினும் நடைபெறும் 
			காட்சிகளின் சாட்சியாக இருப்பார். பெற்றோரை உலகமாகக் கருதியவர் 
			விநாயகர் எனவே அவர் மாணவர்களுக்கு ஆதர்சனமாகிறார். விக்னேஸ்வரரின் வழி 
			நடப்பவர்களுக்கு எவ்வித விக்கினங்களும் அணுகாது. விக்கினேஸ்வரர் வழிபாடு 
			ஆன்மீகத் திலும் உலகியல் முயற்சி களிலும் நாம் வெற்றி பெற உதவுகிறது. 
			விநாயகர் விரும்பும் நைவேத்தியப் பொருட்கள் கூட மக்களின் 
			ஆரோக்கியத்துக்கு ஏற்றவையாகவே அமைகின்றன. எள், அரிசிமா, வெல்லம் என்பன 
			சேர்த்து ஆவியில் அவிக்கப்பட்ட பொருட்களையே விநாயகர் நைவேத்தியமாக 
			ஏற்றுக் கொள்கிறார். இவை பித்தம், வாயுத் தொல்லைகள். ஸ்லேஷ்மம் ஆகிய 
			நோய்கள் வராமல் பாதுகாப்பதோடு ஜீரணத்திற்கும் ஏற்றவையாக உள்ளன. 
			கண்களுக்கு சக்தியை அளிக்கின்றன. விநாயகரை அர்ச்சிக்க உபயோகிக்கும் 
			அறுகம்புல் நோய் தீர்க்கும் மருந்ததாக அமைகிறது. மூஷிக வாகனர் மக்களின் 
			அஞ்ஞான இருளைப் போக்கி அறிவொளியை ஏற்றுபவர். தெய்வீகம் என்பது மனித 
			குலத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல. பறவைகளிடமும் மிருகங்களிடமும் கூட 
			தெய்வீகம் பிரதிபலிப்பதைக் காண முடிகிறது. இவ்வாறு அனைத்து 
			உயிரினங்களிலும் உள்ளுறையும் தெய்வீகத்தை உயர்த்தும் வகையில் தான் 
			விநாயகர் தனது தலையை யானைத்தலையாக அமைத்துக் கொண்டு எலியைத் தனது 
			வாகனமாக வைத்துக் கொண்டார். யானை மிகவும் அறிவுள்ளது. நேர்மையானது. 
			தனக்கென வகுத்துக் கொண்ட பாதையை விட்டு மாறாதது. காடுகளில் பாதை 
			தொயாத போது யானை முன் சென்று பாதையை உருவாக்கிக்காட்டும். அதைப் போல 
			வாழ்க்கை என்னும் காட்டில் யானை முகத்தோன் நமக்கெல்லாம் நடை போட 
			சரியான பாதையைக் காட்டுவார். எலியானது எங்கு செல்லும் போதும் முகர்ந்து 
			பார்த்துக் கொண்டே செல்லும். அத்தகைய உயிரினத்தைத் தனது காலடியின் கீழ் 
			வைத்திருப்பதன் மூலம் தீய எண்ணங்களும் குணங்களும் தன்னைப் பாதிப்பதில்லை 
			என எடுத்துக் காட்டுகிறார் விநாயகர் விநாயகாpன் உருவம், அவரது இயல்பு 
			ஆகியவற்றையும் அவற்றின் உட்பொருளையும் உணர்ந்து கொண்டாலே விநாயகா; 
			வழிபாட்டால் ஏற்படும் முழுமையான திருப்தி எமக்குக் கிடைக்கும். 
			பிள்ளையாரின் மேன்மையை அறிந்து அவரை வழிபட்டு பிறவி எடுத்த பலனை 
			அடைவோமாக. 
			
			 
			(நன்றி: சாயிமார்க்கம்) 
			  
			 
			 
			கிருஷ்ண ஜென்மாஷ்டமி 
			 
			 
			ஆதியும் அந்தமும் இளமையும் பிறப்பும் இறப்பும் 
			அற்றவர் இறைவன். இருப்பினும் அவருடைய அருள் தோற்றங்களுக்கு எல்லை ஏது? 
			நீதியையும் நேர்மையையும் காப்பாற்றி அறத்தை நிலை நாட்ட உலகுக்கு 
			ஞானகுருவாகத் தோன்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னவன் அடியார்களின் 
			உள்ளத்தில் ஆட்சி செய்து தன் புனிதச் சுவடுகளை ஒவ்வொரு முறையும் 
			பூமியில் விட்டுச் செல்கிறார். இருண்ட மேகங்களின் மத்தியில் தோன்றும் 
			மின்னல் போல அதிக பிரகாசத்தோடு அவதாரம் நிகழ்கிறது. கிறிஸ்துவ 
			கணக்குமுறை துவங்குவதற்கு 3228 வருடம் முன்பு ஜீலை 20 ம் திகதி 3.00 மணி 
			அதிகாலையில் குழந்தை கிருஷ்ணன் பிறந்ததாக எமது ஸாயிகிருஷ்ணர் 
			அறிவிக்கிறார். அந்தக் குழந்தை கிருஷ்ணரின் பிறந்த தினமே ஜன்மாஷ்டமி 
			அல்லது கோகுலாஷ்டமி என கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. மங்களகரமான 
			ஸ்வரண மாதத்தில் வளர்பிறையில் அஷ்டமித் திதியில் ரோஹிணி 
			நட்சத்திரத்தில் அப் புனித குழந்தை பிறந்தது. இந்த அவதாரத்தில் 
			கிருஷ்ணர் செய்ய வேண்டிய பணிகள் பல இருந்தன. அசுர சக்தியையும் தீய 
			சக்தியையும் அழித்து அனைவரையும் அன்பால் ஆட்கொள்ள வேண்டியிருந்தது. 
			அத்தோடு தன் கோகுல வாழ்க்ககையிலும் பிருந்தாவன வாழ்க்ககையிலும் 
			குழந்தைப் பருவத்திலேயே நிறைவேற்ற வேண்டிய கடமைகளும் இருந்தன. 
			கொடுமைகள் பலபுரிந்த கம்சனைச் சங்காரம் செய்து மதுராபுரி மக்களுக்கு 
			ஓர் நல்ல மன்னனைத் தந்து உதவுவதும் சிறைப்பட்ட தன் பெற்றோரான வசுதேவர், 
			வாசுகி ஆகியோரை விடுதலை செய்வதுமே அவையாகும். அவதாரங்கள் பொதுவாக 
			மூன்று வகைகளில் அடங்கக் கூடியவை. சுக்லம் (வெள்ளை), அருணா (ஆரஞ்) 
			மஞ்சள்) ஆனால் குழந்தை கிருஷ்ணன் கறுப்பு நிறத்திலிருந்தார். ஆகவே நந்த 
			யசோதையின் குலகுருவான கர்க மகாரிஷி அக் குழந்தைக்கு கிருஷ்ணன் (கறுப்பு) 
			எனப் பெயர் சூட்டினார். குழந்தைப் பருவத்திலே கிருஷ்ணன் வெண்ணெய் 
			கடைந்து எடுப்பதற்காக வைத்திருக்கும் தயிர்ப்பானைகளை உடைத்து விட்டு 
			ஓடிவிடுவது வழக்கம். பானைகளை உடைப்பது என்பது எமது ஆன்மா உடலுடன் 
			கொண்டுள்ள உறவினை உடைப்பதை மறைமுகமாகக் குறிக்கும். ஆன்மாவுக்கும் 
			உடலுக்கும் உள்ள உறவு தானாக உடைவது மரணத்தின் வாயிலாக மட்டுமே. அப்போது 
			பெறுவதற்கு அரிய இவ் உடலைக் கொண்டு எமக்கு மரணத்தைக் கொடுத்தவரைத் 
			தேடிச் செல்ல முடியாது. அதனால் இந்த உடலை வைத்துக் கொண்டே தேட வேண்டும். 
			உயிருடன் இருக்கும் போதே ஆன்மாவுக்கும் உடலுக்கும் உள்ள உறவை பானையை 
			உடைப்பது போல உடைத்து கிருஷ்ண பகவானைக் காண வேண்டும். கிருஷ்ணனால் 
			காக்கப்பட்ட பசுக்கள் திக்குத் தொpயாத காட்டில் கவனிப்பார் இன்றி 
			வழிகாட்டுவாரின்றி திரியும் மனித இனங்களே. கோகுலம் என்பது மனிதர்கள் 
			வசிக்கின்ற இடம் கிருஷ்ணனை நீலமேக வண்ணனாகக் காட்டுவது அவர் ஆழ்கடலைப் 
			போல அளவற்ற ஆழமும் வானத்தைப் போல எட்டமுடியாத உயரமும் உடையவர் 
			என்பதைக் குறிக்கவே. இடைக்குலப் பெண்களான கோபிகைகள் கிருஷ்ணனை ஒவ்வொரு 
			புதரிலும் தேடினார்கள். கிருஷ்ணன் எவ்வளவுதான் அவர்களைக் கவர்ந்தாலும் 
			எப்போதும் அவர்களை விட்டு ஒதுங்கியே இருந்தார். இது எமக்கு உள்ளே 
			இருக்கும் இறைவனை நாம் தேடும் போது எமக்குத் தொpயாமலே எம்மிடமிருந்து 
			அவர் தப்புவதைப் போன்றது. ஆகும். கோபியரின் தன்னலமற்ற அன்பு உண்மையில் 
			ஆன்மீகமயமானதாகும். இன்று ராசலீலை என்று கூறி கிருஷ்ணனின் மகத்துவத்தைக் 
			குறைகாண்போரும் உளர். இச் சம்பவங்கள் எல்லாம் கிருஷ்ணன் ஏழு வயது 
			பாலனாக பிருந்தாவனத்தில் இருந்த போது நடந்தது என்பதை அவர்கள் அறியார் 
			போலும். இன்று ஓவியர் எல்லோரும் தாம் நினைத்தபடி ராதாகிருஷ்ணன் 
			ஓவியங்களை வியாபார நோக்கிலே வரைந்து ஆத்மீகத்தைக் குழப்பியடிக்கின்றனர். 
			படித்தவர்கள், பிரசங்கிகள் கூட கிருஷ்ண தத்துவத்தைப் புரிய முடியாமல் 
			தடுமாறுகின்றனர். ஒரு முறை சுவாமி புட்ட பர்த்தியில் டாக்டர். பானர்ஜி 
			என்பவருக்கு கிருஷ்ணரால் ஆட் கொள்ளப்பட்டது போன்ற ஒரு அற்புத 
			அனுபவத்தைக் கொடுத்து அதன் மூலம் பானர்ஜி கொண்டிருந்த கிருஷ்ணரைப் 
			பற்றிய தவறான எண்ணத்தை மாற்றி உண்மையை உணர வைத்தார். 
			 
			உலகம் முழுவதும் தூங்கும் காலத்தில் ஞானி விழித்துக் கொண்டிருக்கிறான் 
			என்பது கிருஷ்ண பகவானின் கூற்று. எங்கும் ஒரே இருளாக இருக்கும் போது 
			ஓர் ஒளி தோன்றினால் அதை வரவேற்கிறோம். இருளான சமயத்தில் தோன்றிய ஞான 
			ஒளியானதால் தான் மங்காத பிரகாசம் உடையதாய் இன்றும் ஜொலித்துக் 
			கொண்டிருக்கிறார் கிருஷ்ணர். அஞ்ஞானத்தால் இருண்டிருக்கும் உலகில் தான் 
			ஞானத்தின் மகிமை விளங்கும். பார்த்த சாரதியாய் அவர் புகன்ற கீத கர்ம 
			யோகத்தை வலியுறுத்தி உலகெங்கும் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 
			அவர் நிறைந்திருக்கும் மத் பாகவதம் பதிணெண் புராணங்களை எழுதிய பின்னும் 
			மனச் சாந்தியின்றி யமுனைக் கரையில் இருந்த வேதவியாசருக்கு அமைதியை நல்கி 
			புராண சிரேஷ்டமாக விளங்குகிறது. உத்தவருடன் கிருஷ்ணரின் உரையாடல் 
			உத்தவகீதையாக பரிணமித்திருக்கிறது. உடலிலுள்ள உயிருக்கு ஒளியளிப்பது கண். 
			உலகத்துக்கே ஒளியளிப்பவர் கண்ணன். உள்ளகக் கண்களையும் அமிர்தத்தில் மூழ் 
			கடிக்கும் உள்ளங்கவர் கள்வன் அவர். காதின் வழியாக வேணுவின் சங்கீத 
			அமிர்தத்தையும் உபதேசமான கீதா அமிர்தத்தையும் உட் செலுத்திக் குளிர 
			வைக்கும். அந்தக் கண்ணனே இந்த உலகுக்குக் கண். கிருஷ்ணர் ஒரே 
			அவதாரத்தில் பலலீலைகள் செய்த லீலாலோகா மிகவும் சேஷ்டை செய்யும் மாயக் 
			குழந்தை, பிறகு இடைச்சிறுவன், குழலூதும் ரசிகன், மல்யுத்த வீரன், 
			ராஜதந்திர நிபுணன், தூதுவன், சாரதி, திரெளபதைக்கு ஆபத்பாந்தவன், 
			குசேலருக்கு ரட்சகன், பீஷ்மருக்கு முக்தி அளித்த வள்ளல் அது மட்டுமா 
			எதிரி சிசுபாலனுக்கும் தன்னைக் கொல்ல அம்பு எய்த வேடனுக்கும் கூட அவர் 
			முக்தி கொடுத்தவர். கிருஷ்ண பரமாத்மா நல்லவர்களை மட்டுமின்றி 
			மற்றையோரையும் கவர வேண்டும் என்றே ஜாரசோர சிகாமணியாக வேஷம் போட்டார். 
			பற்பல போக்கு கொண்ட மக்கள் எல்லோரையும் தனது வகை வகையான லீலைகளால் 
			தனித்தனியே ஆகாஷித்து தன்னுடைய கருணைக்கும் அதன் மூலம் ஞானத்துக்கும் 
			பாத்திரமாக்கி கடைத்தேற்ற வந்த கிருஷ்ண அவதாரம் பரிபூரண அவதாரமே ஆகும். 
  
			   |